அதன் பின்னர் அதிரடியை தொடர்ந்த ஆர்யா, பதிரனா வீசிய ஓவரில் தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள், பின் ஒரு பவுண்டரி அடித்து சத்ததை பூர்த்தி செய்தார். 39 பந்துகளில் சதமடித்த ஆர்யா, ஐபிஎல் போட்டிகளில் அதிவேக சதமடித்த இந்திய பேட்ஸ்மேன்களில் இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். 42 பந்துகளில் 103 ரன்கள் அடித்த ஆர்யா, தனது இன்னிங்ஸில் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்களை அடித்தார். அணியின் ஸ்கோர் 13.4 ஓவரில் 154 ரன்கள் என இருந்தபோது ஆர்யா அவுட்டானார்.

