Last Updated:
முந்தைய அரசுகள் வளர்ச்சிக்கான திட்டங்களை இழுத்தடித்தன. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது.
வக்பு திருத்த சட்டம் குறித்து ரைசிங் பாரத் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்துள்ளார்.
நியூஸ் 18 குழுமம் டெல்லியில் “ரைசிங் பாரத்” என்ற மாநாட்டை நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், திரை பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். இன்றும், நாளையும் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மொத்தம் 75 அமர்வுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விஐபிகள் பேசுகிறார்கள். செயற்கை நுண்ணறிவு, உலக அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த “ரைசிங் பாரத்” மாநாட்டில் கருத்துரை வழங்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் மோடி கலந்துரையாடினார்.
பின்னர் அவர் பேசுகையில், நான் பிரபலம் அடைவதற்காக வாழ விரும்பவில்லை. இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வாழ விரும்புகிறேன். 2047 ஆண்டை மையப்படுத்தி இந்தியா வளர்ச்சிக்கான பாதையில் பயணம் செய்யத் தயாராகி விட்டது. சர்வதேசத்தில் ஏற்படும் எந்த சவால்களும் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க முடியாது. மாறாக அவை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 2 மடங்காக உயர்த்தும்.
வக்ஃப் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இது உண்மையான சமூக நீதி மற்றும் சமமான சீர்திருத்தத்தை வழங்குவதற்கான அரசின் குறிப்பிடத்தக்க நடவடிக்கையை குறிக்கிறது. வக்பு போராட்டங்கள் மூலம் வகுப்புவாத சக்திகளையும், நில மாஃபியாக்களையும் காங்கிரஸ் அரசு வலிமைப்படுத்தியது.
முந்தைய அரசுகள் வளர்ச்சிக்கான திட்டங்களை இழுத்தடித்தன. இதனால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. விரைவில் அமையும் நவி மும்பை விமான நிலையத்திலிருந்து விமான சேவைகள் தொடங்கும். இது இந்தியாவின் விமானப் போக்குவரத்து சேவையில் குறிப்பிடத்தக்கதாக ஒன்றாக அமையும். என்று பேசினார்.
April 08, 2025 9:10 PM IST
Rising Bharat Summit 2025: ‘உண்மையான சமூக நீதி, சமமான சீர்திருத்தம்’ – வக்பு திருத்த சட்டம் குறித்து பிரதமர் மோடி விளக்கம்


