இன்றைய நண்பகல் 1.00 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1,590.51 புள்ளிகள் உயர்ந்து 74,728.41 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 483.70 புள்ளிகள் உயர்ந்து 22,645.30 என்ற புள்ளிகளில் வர்த்தகமானது.
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,089.18 புள்ளிகள் உயர்ந்து 74,227.08 புள்ளிகளாகவும், நிஃப்டி 374.25 புள்ளிகள் சரிந்து 22,535.85 புள்ளிகளாகவும் நிலைபெற்றது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் பல்வேறு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியிருப்பது பங்குச் சந்தையை சரிவில் இருந்து ஓரளவு மீட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி தனது பொருளாதாரக் கொள்கைகளை வெளியிடவுள்ளதும், பல்வேறு நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாகவுள்ளதும் இந்தியப் பங்குச் சந்தையின் மீட்சிக்கு நம்பிக்கையாக இது அமைந்தது.
எனினும், நேற்றைய சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவுடன் ஒப்பிடும்போது, இந்திய பங்குச் சந்தைகளின் சரிவு சற்று குறைவாகவே இருந்தது.
நிஃப்டி 50 – 374.25 புள்ளிகள் உயர்ந்து (1.69%) 22,535.85 புள்ளிகளாகவும், நிஃப்டி 100 – 399.75 புள்ளிகள் உயர்ந்து (1.76%) 23,077.65 புள்ளிகளாகவும், நிஃப்டி நெக்ஸ்ட் 50 – 1,261.35 புள்ளிகள் உயர்ந்து (2.12%) 60,807.55 புள்ளிகளாகவும், நிஃப்டி வங்கி – 650.90 புள்ளிகள் உயர்ந்து (1.31%) 50,511.00 புள்ளிகளாகவும், நிஃப்டி 100 – 399.75 புள்ளிகள் உயர்ந்து (1.76%) 23,077.65 புள்ளிகளாகவும், நிஃப்டி மிட்கேப் 100 – 1,028.55 புள்ளிகள் உயர்ந்து (2.11%) 49,838.00 புள்ளிகளாகவும், நிஃப்டி ஸ்மால்கேப் 100 – 321.10 புள்ளிகள் உயர்ந்து (2.13%) 15,389.00 புள்ளிகளாகவும், நிஃப்டி ஆட்டோ 322.60 புள்ளிகள் உயர்ந்து (1.63%) 20,138.15 புள்ளிகளாகவும், நிஃப்டி எஃப்எம்சிஜி 1,059.10 புள்ளிகள் உயர்ந்து (1.99%) 54,300.25 புள்ளிகளாகவும், நிஃப்டி ஐ.டி. 575.60 புள்ளிகள் உயர்ந்து (1.76%) 33,244.40 புள்ளிகளாகவும், நிஃப்டி வங்கி 650.90 புள்ளிகள் உயர்ந்து (1.31%) 50,511.00 புள்ளிகளாகவும் முடிந்தது.

