Last Updated:
சவுதி அரேபியா உடனான எரிவாயு ஒப்பந்த விலை உயர்ந்த போதிலும், எல்பிஜி சிலிண்டர் விலை இந்தியாவில் குறைவாக இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்வு முதல் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு வரை சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கம் அளித்துள்ளார்.
“ரைசிங் பாரத்” என்ற பெயரில் நியூஸ் 18 உச்சி மாநாட்டை டெல்லியில் நடத்தி வருகிறது. இதில் மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது,
“மத்திய பாஜக அரசு உலகிலேயே மிகவும் குறைவான விலையில் சமையல் எரிவாயுவை வழங்கி வருகிறது. அரசின் உஜ்வாலா திட்டத்தை எளிதாக்கும் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதன் காரணமாக சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மோடி அரசு பொறுப்பு எடுப்பதற்கு முன்பாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் இணைப்புகள் 14 கோடியாக இருந்தன. தற்போது அவை 33 கோடியாக உயர்ந்துள்ளது. சவுதி அரேபியா உடனான எரிவாயு ஒப்பந்த விலை உயர்ந்த போதிலும், எல்பிஜி சிலிண்டர் விலை இந்தியாவில் குறைவாக இருக்கிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்ட போதிலும், சில்லறை விற்பனையில் எரிபொருளுடைய விலை உயராமல் இருக்கும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் பெட்ரோல், டீசல் விலையில் வித்தியாசங்கள் உள்ளன.
இங்கு 10 முதல் 12 ரூபாய் விலை வித்தியாசம் காணப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு மொத்தம் 27 நாடுகள் கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்தன. இந்த எண்ணிக்கை தற்போது 40 நாடுகள் என உயர்ந்துள்ளது”. என்று தெரிவித்தார்.
சமையல் எரிவாயு விலை 50 ரூபாய் அதன் படி பொது பயனர்களுக்கு சிலிண்டர் விலை ரூ. 853 ஆகவும் 14.2 கிலோ சிலிண்டர் விலை ரூ. 553 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
April 08, 2025 4:30 PM IST
பெட்ரோல் மீதான கலால் வரி முதல் கேஸ் சிலிண்டர் உயர்வு வரை… நியூஸ் 18 மாநாட்டில் விளக்கம் அளித்த மத்திய அமைச்சர்


