Last Updated:
ஐபிஎல் தொடரில் இன்று சிஎஸ்கே-பஞ்சாப் மற்றும் கொல்கத்தா-லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சிஎஸ்கே பழைய பார்முக்கு திரும்புமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளதால் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கும். தோல்விகளில் தடுமாறும் சிஎஸ்கே அணி வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணியை எதிர்கொள்ள உள்ளது. மற்றொரு போட்டியில் சமபலத்துடன் உள்ள கொலகத்தா மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் மூன்றில் தோல்வி கண்டுள்ள சென்னை அணி, வரும் ஆட்டங்களிலாவது பழைய பார்முக்கு திரும்புமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தொடர்ச்சியாக ஹாட்ரிக் தோல்வி கண்டுள்ளதால் சென்னை அணியில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்பேக்ட் பிளேயராக இருக்கும் ஷிவம் துபே உள்ளிட்டோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படலாம் என நமப்படுகிறது. அதேபோல் தோனி பழைய பார்முக்கு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக மாலை 3.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா, லக்னோவை எதிர்கொள்கிறது. உள்ளூரில் விளையாடுவதால் கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலம். அதேநேரம் தொடர்ச்சியாக மூன்று ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள லக்னோ கடும் சவால் அளிக்கும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
April 08, 2025 8:01 AM IST


