• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

பார்முக்கு திரும்புவாரா லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்? – கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை | lsg vs kkr match today IPL 2025

GenevaTimes by GenevaTimes
April 8, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
பார்முக்கு திரும்புவாரா லக்னோ கேப்டன் ரிஷப் பந்த்? – கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை | lsg vs kkr match today IPL 2025
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான கொல்​கத்தா நைட் ரைடர்​ஸ், லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​யுடன் மோதுகிறது.

அஜிங்க்ய ரஹானே தலை​மையி​லான கொல்​கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களு​டன் 4 புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ரிஷப் பந்த் தலைமயி​லான லக்னோ அணி​யும் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 2 வெற்​றி, 2 தோல்வி​களை பதிவு செய்​துள்​ளது. கொல்​கத்தா அணி தனது கடைசி ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணியை 80 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோற்​கடித்து இருந்​தது. அதேவேளை​யில் லக்னோ அணி தனது கடைசி ஆட்​டத்​தில் 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணியை 12 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வென்​றிருந்​தது.

ஹைத​ரா​பாத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் கொல்​கத்தா அணி​யின் பேட்​டிங்​கில் நடு​வரிசை​யில் வெங்​கடேஷ் ஐயர், ரகு​வன்​ஷி​யும் பின்​வரிசை​யில் ரிங்கு சிங்​கும் அபார​மாக செயல்​பட்​டனர். அஜிங்க்ய ரஹானே​வும் உரிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த பங்​களிப்பு வெளிப்​படக்​கூடும். அதேவேளை​யில் டாப் ஆர்​டரில் சுனில் நரேன், குயிண்​டன் டி காக் உயர்​மட்ட செயல் திறனைவெளிப்​படுத்​தத் தவறினர்.

கடந்த சீசனில் கொல்​கத்தா அணி​யின் தொடக்க ஜோடி தாக்​குதல் ஆட்​டம் மேற்​கொண்டு எதிரணி​யின் பந்து வீச்சை கடும் சிதைவுக்கு உட்​படுத்​தின. ஆனால் இம்​முறை தொடக்க ஜோடி​யிடம் இருந்து ஒருங்​கிணைந்த செயல் திறன் வெளிப்​பட​வில்​லை. சுனில் நரேன், டி காக் ஜோடி இந்த சீசனில் தொடக்க விக்​கெட்​டுக்கு சேர்த்த அதி​கபட்ச ரன் 44 மட்​டுமே. அநேக​மாக இன்​றைய ஆட்​டத்​தில் குயிண்​டன் டி காக்​குடன் ரகு​வன்ஷி தொடக்க வீர​ராக களமிறங்க வாய்ப்பு உள்​ளது.

லக்னோ அணி​யானது தனது கடைசி ஆட்​டத்​தில் மும்பை இந்​தி​யன்ஸை வீழ்த்​திய உற்​சாகத்​தில் களமிறங்​கு​கிறது. பேட்​டிங்​கில் மிட்​செல் மார்​ஷின் அதிரடி பலம் சேர்க்​கிறது. எய்​டன் மார்க்​ர​மும் பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது. பின் வரிசை​யில் ஆயுஷ் பதோனி, டேவிட் மில்​லர் பலம் சேர்ப்​பவர்​களாக உள்​ளனர். கடந்த ஆட்​டத்​தில் விரை​வில் ஆட்​ட​மிழந்த நிக்​கோலஸ் பூரன் மீண்​டும் மட்​டையை விளாசுவ​தில் கவனம் செலுத்​தக்​கூடும். அதேவேளை​யில் ரிஷப் பந்த்​தும் இழந்த பார்மை மீட்​டெடுப்​ப​தில் முனைப்பு காட்​டக்​கூடும். அவர், 4 ஆட்​டங்​களில் கூட்​டாக 19 ரன்​கள் மட்​டுமே சேர்த்​துள்​ளார்.

லக்னோ அணி​யின் பந்து வீச்​சில் இளம் வீர​ரான திக்​வேஷ் ராத்தி கவனம் ஈர்த்து வரு​கிறார். இம்​ரான் தாஹிர் போன்ற சிகை அலங்​காரம், சுனில் நரேன் போன்ற பந்து வீச்சு பாணி, கெஸ்​ரிக் வில்​லி​யம்ஸ் போன்ற ‘நோட்​புக் கொண்​டாட்​டம்’ ஆகிய​வற்​றால் இந்த சீசனில் பிரபல​மாகி உள்ள திக்​வேஷ் ராத்தி மீது அதிக எதிர்​பார்ப்பு உள்​ளது. மும்பை அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் அவர், 4 ஓவர்​களை வீசி 21 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்து ஒரு விக்​கெட் கைப்​பற்​றி​யிருந்​தார்.

இந்த சீசனில் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​யுள்ள அவர், ஓவருக்கு சராசரி​யாக 7.62 ரன்​களை மட்​டுமே விட்​டுக்​கொடுத்​துள்​ளார். லென்ந்த்​தில் கட்​டுப்​பாடு, புத்​தி​சாலித்​தன​மான வேரியேஷன் ஆகியவை திக்​வேஷின் பலமாக உள்​ளது. எனினும் அவரது ‘நோட்​புக் கொண்​டாட்​டம்’ சர்ச்​சை​யாகி உள்​ளது. பஞ்​சாப் மற்​றும் மும்பை அணி​களுக்கு எதி​ரான ஆட்​டத்​தில் விக்​கெட் கைப்​பற்​றியதும் திக்​வேஷ் ராத்தி ‘நோட்​புக் கொண்​டாட்​டத்​தில்‘ ஈடு​பட்​டார். இதனால் அவருக்கு இரு முறை அபராதம் வி​திக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் தகு​தி​யிழப்பு புள்​ளி​யும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவர், அபராதத்தை பெற்​றால்​ ஒரு ஆட்​டத்​தில்​ விளை​யாடு​வதற்​கான தடையை எ​திர்​கொள்​ளக்​கூடும்​.



Read More

Previous Post

மே.வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் குளிர்பானம் வழங்கிய முஸ்லிம்கள் | Muslims serve cool drinks during Ram Navami procession in West Bengal

Next Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: 5 நாட்களில் ரூ.2,680 குறைந்தது! | Gold rate sees continuous fall

Next Post
தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: 5 நாட்களில் ரூ.2,680 குறைந்தது! | Gold rate sees continuous fall

தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 சரிவு: 5 நாட்களில் ரூ.2,680 குறைந்தது! | Gold rate sees continuous fall

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin