இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 5.7ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் வடக்கு சுமத்ராவில் இன்று அதிகாலை 1.19 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மக்களிடையே பெரும் அச்சம்
பூமிக்கு அடியில் 37 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் அறியப்படவில்லை என்று அந்நாட்டின் காலநிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஆபத்து ஏதும் இல்லை என்றும் மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்திலும், மியான்மர் நாட்டிலும் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்தனர். இத்தகைய சூழ்நிலையில், இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டு மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

