04
இது ஒருபக்கம் இருக்க, மறுமுனையில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்துவதாக எண்ணெய் நிறுவனங்கள் ஷாக் கொடுத்தன. பாஜக ஆட்சியில், பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார்.


