கோடைக்காலத்தையொட்டி அயோத்தி ராமர் கோயிலுள்ள மூலவர் சிலையான ஸ்ரீ பால ராமர் சிலைக்கு இன்றுமுதல் கதர் ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.
5 வயதுடைய ராமரை சிலையாக வடித்துள்ளதால், கோடை காலத்தையொட்டி பால ராமருக்கு கையால் நெய்த பருத்தி ஆடைகளை அணிவித்து அலங்கரித்துள்ளதாக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் (எக்ஸ்), கோட்டா மலர்களின் வாசத்துடன், இயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட கைகளால் நெய்த ஆடையைக் கொண்டு இன்று பிரபு (பால ராமர்) அலங்கரிக்கப்பட்டுள்ளார் என்று பதிவிடப்பட்டுள்ளது.
Considering the arrival of the summer season and the rising temperatures, starting today, Bhagwan Shri Ramlala will be wearing cotton vastra.
The vastra that Prabhu is wearing today, is made of handloom cotton malmal, dyed with natural indigo, and adorned with gotta flowers.… pic.twitter.com/BtDyzQXYgp
— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) March 30, 2024
கோடைக்கால மாதங்கள் அடுத்தடுத்து வருவதையொட்டி, கதர் ஆடைகள் அணிவிக்கும் முயற்சியை கோயில் நிர்வாகம் எடுத்துள்ளது.
300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் 4.25 அடி உயரத்தில் 5 வயதுடைய பால ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ளது. சிலையின் மொத்த எடை 1.5 டன். மைசூருவைச் சேர்ந்த அருண் யோகிராஜ் சிலையை செதுக்கியிருந்தார்.
அயோத்தி ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் முன்னெச்சரிக்கை கோடைகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில் வளாகத்தில் பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிவறை, ஓய்வறை, போன்றவற்றுக்கு சிறப்பு கவனம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயிலுக்கு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை புரிகின்றனர். கோடை விடுமுறையில் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

