Last Updated:
அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பால் இந்திய பங்குச்சந்தைகளில் 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சி, முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி இழப்பு. சென்செக்ஸ் 2227, நிஃப்டி 743 புள்ளிகள் சரிவு.
இந்திய பங்குச்சந்தைகளில் 10 மாதங்களில் இல்லாத வகையில், இன்று ஏற்பட்ட கடும் வீழ்ச்சி காரணமாக முதலீட்டாளர்களுக்கு 12 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பதிலடி வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரத்தில் அறிவித்தார் இதனால், அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
இந்த நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது. வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஆயிரத்து நூறு புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. பிற்பகலில் ஓரளவுக்கு சரிவில் இருந்து இந்திய சந்தைகள் மீண்டாலும் பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்செக்ஸ் 2227 புள்ளிகள் சரிந்து 73,138 புள்ளிகளாகவும், நிஃப்டி 743 புள்ளிகள் குறைந்து 22,162 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
இன்று ஒரே நாளில் டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் 1 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்தன. டிரென்ட், ஹிண்டால்கோ, L&T நிறுவன பங்குகள் பெரிய அளவில் வீழ்ந்தன zomato, இந்துஸ்தான் யுனிலிவர் ஆகிய நிறுவன பங்குகள் லாபத்தை கண்டன.
Hindustan Copper, Sammaan Capital, Bharat Forge, DLF உள்ளிட்ட 770 நிறுவனங்களின் பங்குகள் கடந்த ஓராண்டில் இல்லாத சரிவை கண்டன. ஆசிய பங்குச்சந்தைகளில் கடந்த 16ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் சரிவு காணப்பட்டது.
April 07, 2025 6:04 PM IST


