Last Updated:
நெட்டிசன்கள் “இந்த 39 வயதுடைய பாட்டி தனது பேரனுக்கு மாமா அல்லது அத்தையை பெற்றுக் கொடுக்க முடியும்” என்று கூறியுள்ளனர்
39 வயதில் ஒருவர் ஒரு மாத வயதுடைய ஆண் குழந்தைக்கு பாட்டியாகியுள்ளார். அவர் தனது பேரனுக்கு பாலூட்டும் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது. சிலருக்கு 39 வயதாகியும் திருமணம் நடைபெறாமல் உள்ள சூழலில் அதே வயதில் ஒருவர் பேரனை பெற்றெடுத்திருப்பது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த நபர் சீனாவின் அன்ஹு மாகாணத்தை சேர்ந்தவர். அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் தன்னைப் பற்றியும் தனது பேரனை பற்றியும் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில் பாட்டில் மூலமாக பேரனுக்கு அவர் பாலூட்டினார்.
மிகவும் இளமை தோற்றத்தில் காணப்பட்ட நபராக இருந்து அவரிடம் யூசர்கள், “அது உங்கள் மகனா?” என்று கேள்வி கேட்டனர். அதற்கு, “குழந்தை என்னுடைய பேரன்” என்று பதில் அளித்து ஆச்சரியப்படுத்தி உள்ளார். அந்த ஒரு மாத ஆண் குழந்தை இந்த பெண்ணுடைய மகளுக்கு பிறந்தது என்று தகவல்கள் கூறுகின்றன.
தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில் அதற்கு நெட்டிசன்கள் அளித்துள்ள கிண்டலான கமெண்ட்கள் கவனம் பெற்றுள்ளது. ஒருவர், “எனக்கு 55 வயது ஆகப்போகிறது. எனது குழந்தை பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார். பாட்டி ஆகுவதற்கு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறீர்கள்?” என்று கூறியுள்ளார்.
இன்னொருவர், “இந்த 39 வயதுடைய பாட்டி தனது பேரனுக்கு மாமா அல்லது அத்தையை பெற்றுக் கொடுக்க முடியும்” என்று கூறியுள்ளார். இன்னும் சிலர், “39 வயதில் எனக்கு இன்னும் திருமணமே நடக்கவில்லை” என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தின் போது சிங்கப்பூரை சேர்ந்த 34 வயதாகும் ஷெர்லி லிங்க் என்பவர் தனது மகன் வழி பேரனுக்கு உணவு ஊட்டினார். அவரது மகனுக்கு 17 வயது ஆகிறது என்பதை கவனிக்கத்தக்கது. இந்த சிங்கப்பூர் பெண் குறித்த தகவல்களும் இணையத்தில் சமீபத்தில் கவனம் பெற்றன.
April 07, 2025 3:19 PM IST


