Last Updated:
அமெரிக்காவிற்கு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பு முறை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 54 விழுக்காடாக உயர்த்தப்பட உள்ளது.
அமெரிக்கா அதிபர் டிரம்பின் வரி விதிப்பால் ஐ-போன் விலை 43 விழுக்காடு வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பு முறை நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர உள்ளது. அதன்படி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரி 54 விழுக்காடாக உயர்த்தப்பட உள்ளது.
இதன்காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் விலை 43 விழுக்காடு வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐ-போனுக்கான உதிரி பாகங்களில் பெரும்பகுதி சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதால் புதிய வரி விதிப்பின் காரணமாக அதன் விலை உயரும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக 68 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஐ-போன் 16 பேஸ் மாடல் செல்போன் விலை இனி ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒரு லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஐ-போன் 16 Pro Max செல்போன் விலை ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாயை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் செல்போன் விற்பனை ஏற்கனவே மந்தமடைந்துள்ள நிலையில், டிரம்பின் புதிய வரி விதிப்பால் விற்பனை மேலும் சரியும் என்று கூறப்படுகிறது.
April 07, 2025 11:14 AM IST