இப்படியிருக்க, ஆனந்த் அம்பானி ஒரு ஆழமான ஆன்மிகப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஜாம்நகரிலிருந்து துவாரகாவில் உள்ள புனித துவாரகாதீஷ் கோவிலுக்கான 170 கி.மீ பாதயாத்திரையை அவர் மேற்கொண்டு வருகிறார். அவர் தினமும் சுமார் 6 முதல் 7 மணி நேரம் செலவிட்டு, தினமும் 20 கி.மீ பாதையாத்திரையாக செல்கிறார்.
இந்த யாத்திரை ஒரு சடங்காக அல்லாமல், தூய பக்தியின் செயலாக பார்க்கப்படுகிறது. கிருஷ்ணருக்கு உடல், மனம் மற்றும் ஆன்மாவை அர்ப்பணித்து, அனந்த் அம்பானி, துவாரகாதீஷின் அருளுக்கும் சனாதன தர்மத்தின் கொள்கைகளுக்கும் சரணடைகிறார். இந்தப் பயணம் அமைதி, தனிமை மற்றும் தெய்வீகத்தைத் தேடுவது பற்றியது.
அனந்த் அம்பானி, குஷிங்ஸ் நோய்க்குறியாலும், குழந்தைப் பருவத்திலிருந்தே ஆஸ்துமா, கடுமையான நுரையீரல் நோய் போன்றவையுடன் போராடி வருகிறார். இந்த பாதயாத்திரை அவருக்கு உடல் ரீதியாக சவாலாக இருக்கும். இருப்பினும், அனந்துக்கு இது வலிமையை நிரூபிக்கும் பாதயாத்திரையாக அல்லாமல், நம்பிக்கையை மேலோங்க வைக்கும் பாதயாத்திரையாக அமைந்துள்ளது.
பாதயாத்திரை செல்லும் வழியில் உள்ளூர் சமூகத்தினரிடமிருந்து அவருக்கு அன்பும் ஆதரவும் கிடைத்துள்ளது. சிலர் அவருடன் கலந்து கொண்டு, துவாரகாதீஷின் பிரார்த்தனைகள் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர். இதுமட்டுமின்றி, பாகேஷ்வர் தாம் தலைமை பூசாரி தீரேந்திர சாஸ்திரி மற்றும் வைஷ்ணவாச்சாரியார் ராஸ்ராஜ் மகாராஜ் உள்ளிட்ட இரண்டு முக்கிய ஆன்மிக பிரமுகர்களும் அவருக்கு ஆதரவாக இந்த பாதயாத்திரையில் கலந்துகொண்டுள்ளனர்.
வழியெங்கும், அனந்த் அம்பானிக்கு ஹனுமான் சாலிசா, ராமாயணத்திலிருந்து சுந்தரகாண்டம் மற்றும் தேவி ஸ்தோத்திரங்கள் உள்ளிட்ட மத மந்திரங்கள் கூறப்படுகிறது. ஆனந்த் அம்பானி போன்ற இளம் வயதினருக்கு இந்த அளவு மத மற்றும் ஆன்மிக முதிர்ச்சி இருப்பது அரிய பரிசாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் அகில இந்திய மாநாடு.. ‘மார்க்சிய மாணவனாக மாறிவிட்டேன்’ – வெற்றிமாறன்!
பாதயாத்திரை என்பது தனிப்பட்ட தேடலாகும். சில நெருக்கமான உதவியாளர்கள் மற்றும் ஆன்மிக வழிகாட்டிகளுடன் ஒவ்வொரு அடியிலும், அனந்த் உண்மையான வலிமை பெரும்பாலும் அமைதியாகவே நடப்பதைக் காட்டுகிறார்.
இந்த உலகில், துவாரகாவிற்கான அனந்தின் நடைப்பயணம் தெளிவு, தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் செயலாகும். அவர் மேற்கொண்ட இந்த பாதயாத்திரை நம்பிக்கை காலத்தால் அழியாதது என்பதை நினைவூட்டுகிறது.
அனந்தின் நடைப்பயணம் சடங்கு அல்ல, அது சுய பொறுப்பைப் பற்றியது. ஒவ்வொரு நாளும் கடினமான பாதையில் நடப்பதைக் கடந்து செல்வது – புகழுக்காக அல்ல, அமைதிக்காக. உலகைக் கவர அல்ல, தெய்வீகத்திற்கு நன்றி தெரிவிக்க. அவரது பயணம் வலியை தாங்கி, நம்பிக்கையைக் காட்டுகின்றது.
இந்த தனிப்பட்ட பயணத்தின் மூலம், அனந்த் அம்பானி ஒரு தலைமுறைடம் பேசுகிறார். வாழ்க்கைப் பாதையில் பக்தி வழிகாட்டி என்பதற்கும், நம்பிக்கை அனைத்து தடைகளையும் தாண்டிச் செல்கிறது என்பதற்கும் அவர் வாழும் சான்றாக இருக்கிறார். அவர் தனது 30ஆவது வயதை அடைவதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 8ஆம் தேதி துவாரகாதீஷ் கோயிலை அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
April 05, 2025 10:05 AM IST

