வாட்டி வதைக்கும் கோடை காலம் என்றாலும் அதை நாம் எதிர்நோக்குவதற்கு ஒரு காரணம் உண்டென்றால் அது இக்காலத்தில் மட்டுமே நாம் உண்டு மகிழும் பல வகையான பழவகைகள் கிடைக்கும். இந்த பருவத்திற்கு மட்டும் கிடைக்கக்கூடிய தர்பூசணி, மாம்பழங்கள், கிர்ணி வெள்ளரி போன்ற பழரகங்களுக்கு அதிகம் மவுசு காணப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் கோடை வெயிலுக்கு, அதிகம் நீர்ச்சத்து மிக்க தர்பூசணி பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து தான் அதிகளவில் தர்பூசணி விற்பனைக்கு செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் வானூர், மரக்காணம், காணை, முகையூர், திண்டிவனம் வட்டாரங்களில் 6 ஆயிரம் விவசாயிகள் மூலம், 8,500 ஏக்கர் அளவில் தர்பூசணி பயிரிடப்பட்டு, இந்தாண்டும் அறுவடை நடந்து, தினசரி லாரிகளில் விற்பனைக்கு செல்கிறது.
இதையும் வாசிக்க:மண்பாண்ட பொருட்கள் வாங்குறீங்களா…? இந்த சத்தம் கேக்குதானு பார்த்து வாங்கனும்…
இந்நிலையில், பொது மக்களை ஈர்க்கவும், சுவைக்காகவும் தர்பூசணி பழங்களில் ரசாயனம் கலந்து விற்கப்படுவதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இதனையடுத்து, வேளாண் அதிகாரிகள், தோட்டக்கலை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை குழுவினர் தோட்டங்களுக்கு நேரில் சென்று, தர்பூசணி பழங்களை சோதித்தும், அதனை சாப்பிட்டு பார்த்தும் தரமாக உள்ளது, ரசாயனம் கலப்பு வதந்தி என விளக்கினர்.
ஆனால், தர்பூசணி குறித்த வதந்தியால், தமிழகம் முழுவதும் உள்ள பல பகுதிகளில், திடீரென அதன் விற்பனை சரிந்து பாதித்துள்ளதாக பல பகுதிகளில் உள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, உணவு பாதுகாப்பு துறையினர், தர்பூசணி பயிரிட்டுள்ள நிலத்திற்கு சென்று ஆய்வு செய்து, உண்மை நிலையை விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும், உடனே கள ஆய்வு செய்து, உண்மை நிலையை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் பல பகுதியில் உள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வதந்தி பரப்புவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
மேலும் பல பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், தர்பூசணி தோட்டங்களில் உள்ள பழங்களை ஆய்வு செய்து, அவை தரமானவை என்றும், அடர்சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அச்சமின்றி உண்ணலாம் என்றும் விளக்கமளித்துள்ளனர். இருந்தபோதிலும் பொதுமக்கள் மத்தியில், தர்பூசணி என்றாலே, அதுவும் அடர் நிறத்தில் தர்பூசணி பார்த்தாலே, இரசாயனம் கலந்த தர்பூசணி தான் என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து விலகவில்லை.

தர்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு
எனவே, தர்பூசணி பழங்களின் கலப்படம் குறித்து ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் பல விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
April 04, 2025 3:21 PM IST

