எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
கடந்த 24 மார்ச் 2025 அன்று, சவுக்கு சங்கரின் தாயார் தனியாக வீட்டில் இருந்தபோது, சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டுக் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியதாக ஈபிஎஸ் குறிப்பிட்டார். “அவர்கள் வீட்டு பொருட்களை எடுத்துச் சென்று, படுக்கையறை, சமையலறை உள்ளிட்ட பகுதிகளை சேதப்படுத்தினர். மலம் மற்றும் சாக்கடை நீரை வீட்டுக்குள் கொட்டி, மிக மோசமான முறையில் இந்தக் கொடுமையைச் செய்துள்ளனர்,” என்று அவர் கூறினார். “இப்படி ஒரு கீழ்த்தரமான செயல் தமிழகத்தில் இதுவரை நடந்ததில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்,” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

