இதுவரை தாங்கள் விளையாடிய 3-ல் ஒரு போட்டியில் மட்டுமே இரு அணிகளும் வென்றுள்ளன. இன்றைய போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தா அணியில், ரிங்கு சிங், ரஹானே, ரசல், சுனில் நரைன் உள்ளிட்டோர் வலு சேர்க்கின்றனர். எத்தனை பெரிய ஸ்கோராக இருந்தாலும், விரட்டிப்பிடிக்கும் திறன் கொண்ட பேட்ஸ்மேன்கள் அதிகம் உள்ள அணியாக ஐதராபாத் உள்ளது.
பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் ஐதராபாத் அணியில் பலம் வாய்ந்த வீரர்களாக கருதப்படுகின்றனர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்க உள்ளது.
நடப்பு சாம்பியனாக இருக்கும் கொல்கத்தா அணியுடன், வலுவான டீமாக கருதப்படும் ஐதராபாத் இந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா அணியின் உத்தேசிக்கப்படும் ப்ளேயிங் 11
குயின்டன் டி காக்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), ரிங்கு சிங், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
ஐதராபாத் அணியின் உத்தேசிக்கப்படும் ப்ளேயிங் 11
டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, வியான் முல்டர், பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஜீஷன் அன்சாரி, ஹர்ஷல் படேல், முகமது ஷமி
April 03, 2025 4:47 PM IST

