இந்த வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதிக்கு ஒரு பெரிய அடி என்று கூறப்படுகிறது. இது பல தொழில்களைப் பாதிக்கும் என்றும், இந்திய பொருளாதாரத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்துமா என்றும், ஆபத்தில் உள்ள முக்கிய துறைகளைப் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் “சிறந்த நண்பர்” என்று அழைத்தாலும், அமெரிக்கா பல தசாப்தங்களாக மென்மையாக இருக்கும் அதே வேளையில், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு அதிகப்படியான வரிகளை வசூலித்து வருவதாக அவர் கூறினார். மேலும், இந்தியா எங்களிடம் 52% கட்டணம் வசூலிக்கிறார்கள். நாங்கள் பல ஆண்டுகளாக, பல தசாப்தங்களாக கிட்டத்தட்ட எதுவும் வசூலிக்கவில்லை என்று டிரம்ப் கூறினார். புதிய கட்டண அமைப்பு போட்டியை சமன் செய்வதற்காகவே என்பதை தெளிவுபடுத்தினார்.
இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரை, இந்த கட்டணங்கள் ஒரு பெரிய தலைவலியாக மாறக்கூடும். ஏனென்றால், பல முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்படும். இது சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய கூட்டு நிறுவனங்கள் வரை பல நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்தினக் கற்கள், நகைகள், மருந்துகள் மற்றும் வாகன பாகங்கள் உட்பட $23 பில்லியன் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகளுக்கான வரிகளைக் குறைப்பதை இந்தியா பரிசீலித்து வருவதாக தெரிகிறது.
Also Read: இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26% வரி – டிரம்ப் அறிவிப்பு
மேலும், அமெரிக்கப் பொருட்கள் மீது இந்த நாடுகள் விதிக்கும் அதிக இறக்குமதி வரிகளை எதிர்கொள்ளும் நோக்கில் இந்த வரிகள் விதிக்கப்படுவது, இந்தியாவின் பொருளாதாரம், வர்த்தக உறவுகள் மற்றும் நாணயச் சந்தைகளில் குறுகிய கால மற்றும் நீண்ட கால தாக்கங்களை ஏற்படுத்தும். இருப்பினும், டொனால்ட் டிரம்ப் அறிவித்த வரித் திட்டம் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவை குறைவாகவே பாதிக்கும் என்று அசோசேம் தலைவர் சஞ்சய் நாயர் கூறினார். இந்த கட்டணங்களின் தாக்கத்தைக் குறைக்க ஏற்றுமதி திறன் மற்றும் மதிப்பு கூட்டலை அதிகரிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
ஆபத்தில் உள்ள துறைகள்
ஆட்டோக்கள், மருந்துகள் மற்றும் ஐடி, இறக்குமதி செய்யப்பட்ட ஆட்டோமொபைல்கள் மற்றும் ஆட்டோ பாகங்கள் மீது அமெரிக்கா அறிவித்துள்ள 25% கட்டணத்துடன் கூடுதலாக 26% பரஸ்பர வரி விதிக்கப்படுகிறது. இது ஏப்ரல் 2 முதல் கார்கள் மற்றும் இலகுரக லாரிகளுக்கும், மே 3 முதல் ஆட்டோ பாகங்களுக்கும் அமலுக்கு வருகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால், மருந்துத் துறையில் அதிக தாக்கத்தை கூட எதிர்பார்க்கலாம். அமெரிக்கா இந்திய மருந்து ஏற்றுமதிக்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தையாகும். அதிகரித்த கட்டணங்கள் ஏற்றுமதி வருவாயில் சரிவுக்கு வழிவகுக்கும்,” என்று அவர் கூறினார். இந்த கட்டணங்களால் கடுமையாக பாதிக்கப்படும் மற்றொரு துறை ஐடி ஆகும். இந்தியா கணிசமான ஏற்றுமதிகளைக் கொண்ட ஒரு துறையான ஐடி சேவைகளுக்கு சாத்தியமான வரிகளை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
இது இந்திய ரூபாயை பலவீனப்படுத்தி, அந்நிய நேரடி முதலீட்டைத் தடுக்கக்கூடும். இருப்பினும் உள்நாட்டு ஊக்கத்தொகை அபாயங்களை ஈடுகட்டக்கூடும். இந்த வரிகள் ஏற்றுமதி, வர்த்தக உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதை தடுக்க இரண்டு யோசனைகள் கூறப்படுகின்றன. ஒன்று பேச்சுவார்த்தை நடத்தி அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளைக் குறைத்தல் அல்லது நீடித்த வர்த்தகப் போருக்குத் தயாராகுதல் ஆகும்.
April 03, 2025 11:02 AM IST

