இந்தியாவின் முக்கியத் தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்தது ஜியோ நிறுவனம்.
தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டுவரும் இந்நிறுவனம், மற்ற போட்டி நிறுவனங்களைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டில் அதிவேக இணைய சேவையை வழங்கியுள்ளது. குறிப்பாக 5ஜி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சீரான வேகத்தில் சேவையை அளித்துள்ளது.
அதிவேக இணைய சேவை
ஓக்லா நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜியோ இணைய சேவையில் 258.54 Mbps வேகத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 14.54 Mbps வேகத்தில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனால், 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் சிறந்த சேவையை வழங்கிய நிறுவனமாக ஜியோ தேர்வாகியுள்ளது.
அதிவேக இணைய சேவைக்காக மட்டுமல்லாமல், பரந்த அளவிலான பயனர்களுக்கு இதே தரத்திலான சேவையை வழங்கியதும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின்படி, ஜியோ நிறுவனம் அதிவேக இணைய சேவையை வழங்கியுள்ளது.

