கூட்டாளிகள் 4 பேர் கைது
சுட்டுக் கொல்லப்பட்ட மொட்டை விஜய்யின் உடல் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்படுகிறது. மேலும் விழுப்புரம் நான்கு வழிச்சாலை லாரி உரிமையாளர்களிடம் வழிப்பறி செய்தது தொடர்பாக, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது விக்னேஷ், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ரேவந்த், ஆகாஷ், அன்பரசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

