- கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது.
- இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம்.
- புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம்.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள கடல் எல்லைகளை வரையறுத்தது, மேலும் மீனவர்களின் உரிமைகள் மற்றும் இரு நாடுகளின் இறையாண்மை ஆகியவற்றை உறுதிப்படுத்தியது. இருப்பினும், இந்த ஒப்பந்தம் தமிழ்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதில் எதுவுமே மாறவில்லை. மாறியது ஒன்றே ஒன்று தான், இந்தியா வசமிருந்த கச்சத்தீவு, இலங்கைக்கு மாறியது!

