April 02, 20257:44 AM IST
Tamil Live Breaking News : விருதுநகரில் பயங்கர தீ விபத்து!
விருதுநகரில், குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காலையில் தீப்பிடித்தது. தீயானது அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்கும் பரவியதால், குடிசை வீடுகள் உள்ளிட்ட 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
#JUSTIN விருதுநகரில் சமையல் எரிவாயு
கசிவால் பயங்கர தீ விபத்து#Virudhunagar #FireAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/DX8v5JQ4Mp— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 2, 2025

