ஆ.ராசாவின் பரபரப்பு பேச்சு
தொடர்ந்து மாணவர் அணி கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, ‘‘கடவுளை வணங்குங்கள், ஆனால் கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் பொட்டு வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், உங்களுக்கும் சங்கிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நல்லா சாமி கும்பிடுங்க, அம்மா, அப்பா பொட்டு வெச்சா வெச்சுக்கோங்க. ஆனால் திமுகவேட்டி கட்டினால் அதை அழித்துவிடுங்கள். கொள்கை இல்லாமல் போன அந்த கட்சி அழிந்துவிடும். அதை நோக்கி போவது தான் அதிமுக ’’ என ஆ.ராசா பேசினார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது பகிரப்பட்டு, பயங்கர வைரல் ஆகி வருகிறது.

