Last Updated:
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு வக்பு வாரிய திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது.
கடும் எதிர்ப்புக்கு இடையே வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நாளை தாக்கல் ஆகிறது.
நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவை நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வக்பு வாரிய திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பை அடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மசோதாவின் அம்சங்கள் தொடர்பாக கூட்டுக் குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், 4ஆம் தேதியுடன் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் நிறைவு பெற உள்ள நிலையில், புதன்கிழமை மக்களவையில் மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்படும் நிலையில், வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மசோதா தாக்கலின் போது உறுப்பினர்கள் முழுமையாக அவையில் இருக்குமாறு கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
April 01, 2025 8:04 AM IST


