இந்நிலையில் அந்த வழக்கு, கோவை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. கே சி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிவக்குமார் ஆஜராகி இருந்தார். குற்றவியல் அவதூறு வழக்கில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்திரவிடப்பட்டது. ஏப்ரல் 15ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 15 ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

