Last Updated:
புதுச்சேரியில் நடைபெற்ற ஃபேன் பார்க் நிகழ்ச்சியில் சென்னை பெங்களூர் அணிகள் மோதிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பிரம்மாண்ட திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
புதுச்சேரியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மேட்ச் என்றாலே கொண்டாட்டங்கள் கலைக்கட்டும். அதன்படிஇ.சி.ஆர் சாலையில் உள்ள யூனிட்டி பார்க் தனியார் பொழுதுபோக்கு நிறுவனம் சார்பில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் ஐபிஎல் ஃபேன் பார்க் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மிகப்பெரிய பிரமாண்ட திரையில் ஒளிபரப்பப்பட்டது. போட்டியை காண புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள கோட்டகுப்பம் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
முற்றிலும் இலவசமாக நடைபெற்ற ஃபேன் பார்க் நிகழ்ச்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் பெங்களூர் அணி ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களது அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பொழுது ஆரவாரம் செய்ததோடு, நடனம் ஆடி மகிழ்ந்தனர். மேலும் ஃபேன் பார்க் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ரசிகர்கள் முகங்களில் தங்களது அணிகளின் பெயர்களை வண்ணங்களால் வரைந்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் உற்சாக மிகுதியில் மைதானத்தில் போட்டியை காண்பது போல் விக்கெட்டுகள் விழும் பொழுதும் சிக்ஸர், ஃபோர் என பந்துகள் பறக்கும் பொழுதும் ரசிகர்களின் சத்தம் விண்ணை மூட்டியது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Puducherry (Pondicherry),Puducherry,Puducherry (Pondicherry)
March 31, 2025 12:05 PM IST

