செங்கோட்டையன் குறித்த கேள்வி
செய்தியாளர்கள், பாஜக தலைவர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் அமித்ஷாவை செங்கோட்டையன் தனித்தனியாக சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பியபோது, செல்லூர் ராஜு பதிலளிக்கையில், “ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? உங்கள் தொலைக்காட்சி செய்தியாளர் ஈரோட்டில் உள்ள செங்கோட்டையனிடம் நேரடியாகக் கேட்கலாம். அவர் மூத்த நிர்வாகி, மதிக்கப்படுபவர். எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை மதிக்கிறார். அமைச்சரவையில் பள்ளிக்கல்வித்துறை என்ற முக்கிய இலாகாவை கொடுத்து எடப்பாடியார் அழகுபார்த்தார். அவர் பாஜக தலைவர்களைச் சந்தித்தது குறித்து அவரிடமே கேட்க வேண்டும். அவர் என்ன கருத்து சொன்னார், எதற்காக சந்தித்தார் என்பது எனக்குத் தெரியாது. அதை அவரிடம் கேட்டால் தெளிவாகச் சொல்வார்,” என்று கூறினார்.

