Last Updated:
Javvarisi Appalam| ஜவ்வரிசி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டார்ச் மாவினை மூலப்பொருளாக பயன்படுத்தி, ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு என்பது குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கைகளால் செய்யப்படும் ஜவ்வரிசி அப்பளம் பிரதான குடிசைத் தொழிலாகவே உள்ளது. ஜவ்வரிசி அப்பளத்தை உற்பத்தி செய்வது குறித்த பின்னணி தகவல்களைப் பார்க்கலாம்.
ராசிபுரம் சுற்றுப் பகுதியில் அதிகளவிலான மரவள்ளிக் கிழங்கு விளைச்சலால், மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் மாவு போன்றவை உற்பத்தி செய்யும் சேகோ ஆலைகள் அதிகளவில் உள்ளன. ஜவ்வரிசி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஸ்டார்ச் மாவினை மூலப்பொருளாகப் பயன்படுத்தி, ஜவ்வரிசி அப்பளம் தயாரிப்பு என்பது குடிசைத் தொழிலாக நடைபெற்று வருகிறது. நாமகிரிப்பேட்டை, அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் வீடுகள் தோறும் ஜவ்வரிசி அப்பளம் உற்பத்தி தொழில் செய்துவருவது காணமுடியும். இத்தொழில் இப்பகுதியில் பல குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சிறிய வட்ட வடிவிலான அப்பளங்கள் பெரும்பாலும் ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி போன்ற வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சாதாரண அப்பளங்களை விட அளவில் சிறியதாக உள்ள ஜவ்வரிசி அப்பளம் வட மாநிலத்தவர்களால் விரும்பி உண்ணப்படுகிறது. இப்பகுதியில் ஒரு ரூபாய் நாணய அளவுள்ள அப்பளம், அதைவிட சற்று பெரிய 3 செ.மீ. அளவுள்ள அப்பளம் போன்றவை தயாரிக்கப்படுகிறது. இந்த அப்பளம் தயாரிப்பில் பெரிய அளவில் இயந்திரம் ஏதும் பயன்படுத்தாமல் அடுப்பில் அரிசி வேகவைத்து கைகளால் செய்கின்றனர் என்பதால் கூடுதல் சிறப்பு பெறுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 31, 2025 12:11 PM IST

