Last Updated:
IPL | 18.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை தோற்கடித்து இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
டெல்லி அணி ஒரு போட்டியில் மட்டும் ஆடி வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் பங்கேற்று ஒன்றில் தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி அணிக்கு நெருக்கடியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் 20 ஓவர்கள் முடியும் முன்பாகவே ஆல் அவுட் ஆனார்கள்.
டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கைகொடுக்கவில்லை. அதிரடியாக தொடங்கிய அந்த அணியின் டாப் ஆர்டர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் வீழ்ந்தது. 37 ரன்கள் எடுப்பதற்குள் 4 முக்கிய விக்கெட்டுகள் வீழ, அணியை மீட்டெடுத்தார் இளம் வீரர் அனிகேத் வர்மா.
அவரை தவிர, மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படியாக விளையாடவில்லை. இதனால், 18.4 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்கள் எடுத்தது. டெல்லி அணி சார்பில் ஸ்டார்க் 5 விக்கெட், குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக அனிகேத் வர்மா 74 ரன்கள் எடுத்தார்.
இதன்பின் களமிறங்கிய டெல்லி அணிக்கு பாப் டு பிளசிஸ் அதிரடியாக ஆடி 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். அதேபோல், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 38 ரன்கள், அபிஷேக் போரல் 32 ரன்கள் எடுக்க 16 ஓவர்களிலேயே டெல்லி அணி 166 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் ஜீஷான் அன்சாரி 3 விக்கெட் வீழ்த்தினார். மற்ற சன்ரைசர்ஸ் பௌலர்கள் யாரும் விக்கெட் எடுக்கவில்லை.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
March 30, 2025 6:48 PM IST


