உலகளவில் பல்வேறு பயனர்களுக்கு சாட்ஜிபிடி சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சாட்ஜிபிடியின் ஜிப்லி எனப்படும் புகைப்படத்தை ஓவியமாக மாற்றும் சேவையில் பிழைகள் ஏற்படுவதாகவும் இதனால் சாட்ஜிபிடி சேவையும் பாதிக்கப்படுவதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓபன் ஏஐ நிறுவனத்துக்குச் சொந்தமானது சாட்ஜிபிடி. செய்யறிவு தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் சாட்ஜிபிடியை உலகம் முழுவதும் பல்வேறு பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சாட்ஜிபிடியில் புதிய அம்சமாக செய்யறிவு நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்களை ஓவியமாக மாற்றும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய ஜிபிடி – 4.0 என்னும் புகைப்பட ஊக்கியின் மூலம் ஜிப்லி சேவை வழங்கப்படுகிறது.
இதன்மூலம் பயனர்கள் வழங்கும் புகைப்படங்களில் உள்ள உருவங்கள் மற்றும் பின்னணிகளை ஓவியமாக மாற்றி ஜிப்லி வழங்குகிறது. இது பெரும்பாலும் அனிமி எனப்படும் கார்ட்டூன் கதாபாத்திர வடிவை பிரதிபலிக்கிறது.

