சரியான காம்பினேஷன் தேடும் சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றாலும், ஆர்சிபிக்கு எதிராக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை தழுவியது. பவுலிங் பெரிதாக எடுபடாத நிலையில், பேட்டிங்கிலும் தடுமாறியது. டாப் ஆர்டரில் ராகுல் திரிபாதி, தீபக் ஹுடா ஆகியோர் இரண்டு போட்டிகளிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

