• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள்.. ரூ.62,000 மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்து! 

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
156 இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள்.. ரூ.62,000 மதிப்பிலான ஒப்பந்தங்களில் மத்திய அரசு கையெழுத்து! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 30, 2025 7:38 AM IST

இந்த ஹெலிகாப்டர்கள் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் தும்கூரில் உள்ள HAL-ன் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும். இந்த ஹெலிகாப்டர்களின் சப்ளை ஒப்பந்தத்தின் மூன்றாம் ஆண்டில் இருந்து தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும். இந்த ஒப்பந்தம் ஆயுதப் படைகளின் போர் திறனை கணிசமாக

News18News18
News18

இந்திய ராணுவம் மற்றும் விமானப்படையின் பலத்தை அதிகரிக்க மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இந்திய விமானப்படை (IAF) மற்றும் இந்திய ராணுவத்திற்காக Prachand எனப்படும் 156 இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் (LCH- Light Combat Helicopter) வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் ரூ.62,700 கோடி மதிப்புள்ள இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் சமீபத்தில்

கையெழுத்திட்டுள்ளது.

156 ஹெலிகாப்டர்களில், 66 இந்திய விமானப்படைக்கும், 90 இந்திய ராணுவத்திற்கும் வழங்கப்படும். உலகின் ஒரே போர் ஹெலிகாப்டரான Prachand -ஆனது சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிறுத்தப்படும். இந்த ஹெலிகாப்டர்கள் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் தும்கூரில் உள்ள HAL-ன் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும். இந்த ஹெலிகாப்டர்களின் சப்ளை ஒப்பந்தத்தின் மூன்றாம் ஆண்டில் இருந்து தொடங்கி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும். இந்த ஒப்பந்தம் ஆயுதப் படைகளின் போர் திறனை கணிசமாக அதிகரிக்கும்.

Prachand போர் ஹெலிகாப்டரின் சிறப்பு என்ன?: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட முதல் போர் ஹெலிகாப்டர் இதுவாகும். மேலும் இது 5,000 மீட்டருக்கும் (16,400 அடி) அதிகமான உயரத்தில் பறக்கும், தரையிறங்கும் மற்றும் புறப்படும் திறன் கொண்டது. சியாச்சின், லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் உயரமான மலை பகுதிகளில் செயல்பட ஏற்றதாக இது இருக்கிறது. இந்த போர் ஹெலிகாப்டரில் தரை மற்றும் வான்வழி தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது வானிலிருந்து தரை மற்றும் வானிலிருந்து வான் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்டது மற்றும் எதிரிகளின் வான் பாதுகாப்பு நடவடிக்கைகளை அழிக்கும் வல்லமை கொண்டது. தற்போது, ​​இந்திய விமானப்படை ராஜஸ்தானின் ஜோத்பூரில் 10 இலகுரக போர் ஹெலிகாப்டர்களை இயக்கி வருகிறது, அதே நேரத்தில் இந்திய ராணுவம் அசாமின் மிசாமரியில் 5 இலகுரக போர் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துகிறது. இது உலகின் ஒரே ஸ்டெல்த் ஹெலிகாப்டர் ஆகும், இது 16,400 அடி உயரத்தில் தரையிறங்க முடியும்.

பிரசந்தாவின் அதிகபட்ச வேகம் மணிக்கு 463 கி.மீ. இது 20 மிமீ நோஸ் கன் மற்றும் 70 மிமீ ராக்கெட் பாட்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.மேலும் அரசு 83 இலகுரக போர் விமானங்கள் (LCAs) உட்பட உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்த மிகப்பெரிய ஆர்டரை வழங்கியுள்ளது, மேலும் 97-ஐ ஆர்டர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன.

பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு சமீபத்தில் 307 அட்வான்ஸ்ட் டவர்ட் (ATAGS) ஹோவிட்சர்களுக்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் அதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.7,000 கோடி ஒப்பந்தம் பாரத் ஃபோர்ஜ் மற்றும் டாடா குழுமம் உள்ளிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு இடையே பிரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.

First Published :

March 30, 2025 7:38 AM IST

Read More

Previous Post

தென்னகோனுக்கு உதவிய தொழிலதிபருக்கு பிணை

Next Post

விராட் கோலியை அவமதித்தாரா ரிங்கு சிங்..? வாட்டி எடுக்கும் ரசிகர்கள்..!

Next Post
விராட் கோலியை அவமதித்தாரா ரிங்கு சிங்..? வாட்டி எடுக்கும் ரசிகர்கள்..!

விராட் கோலியை அவமதித்தாரா ரிங்கு சிங்..? வாட்டி எடுக்கும் ரசிகர்கள்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin