Last Updated:
கேரளா கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி, 2026-2027 கல்வி ஆண்டில் இருந்து குழந்தைகளை ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் புதிய விதி அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
கேரளாவில் குழந்தைகளை 1ஆம் வகுப்பில் சேர்க்கும் வயதை ஆறு என உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளா மாநில கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி கடந்த வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கேரளாவில் இனி குழந்தைகள் ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். தற்போதுவரை 5 வயதில் ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் பழக்கம் மாநிலத்தில் இருந்துவருகிறது. ஆனால், அறிவியல்பூர்வமான ஆய்வுகளில் குழந்தைகள் ஆறு வயதை எட்டிய பிறகே ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதுதான் அவர்கள் முறையான கல்வி கற்கும் பருவம் என்பது நிரூபணமாகியுள்ளது.
இதன் காரணமாக, கல்வியில் மேம்பட்டுள்ள அனைத்து நாடுகளும் ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் தான் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் நடைமுறை இருந்துவருகிறது. எனவே ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பு எனும் முடிவை கேரளா அரசு எடுத்துள்ளது.
இதையும் படியுங்கள் : “1- 5ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு?” – பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பகிர்ந்த தகவல்!
தற்போதே மாநிலத்தில் 50% நபர்கள் தங்கள் குழந்தைகளை ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கிறார்கள். இதனை இன்னும் ஊக்குவிக்க வேண்டும். ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பு சேர்க்கை என்பது 2026-2027 கல்வி ஆண்டு முதல் முழுவதுமாக அமலுக்கு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
March 29, 2025 6:46 PM IST
குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்க புதிய விதி.. கேரளா கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு


