Last Updated:
Ramzan Goat Sales: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை உள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும் இந்த சந்தைக்கு கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் வெள்ளாடு, சீனி வெள்ளாடு, செம்மறியாடு உள்ளிட்ட ஆடுகளை வாங்கி செல்ல வியாபாரிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தேனி என தமிழகத்தின் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இங்கு ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.
ரம்ஜான், தீபாவளி, பொங்கல் மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை களைகட்டும். இந்த சமயங்களில் சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.10 கோடி வரை விற்பனை நடைபெறுவது வழக்கம்.
இதையும் படிங்க: Nilgiris Tourist: நீரில்லாத அணை… பாலைவனம் போல் காட்சியளிக்கும் மலை… நீலகிரி வரும் பயணிகள் ஏமாற்றம்…
இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை முதல் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு எட்டையாபுரம் ஆட்டுச் சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது.
சந்தைக்கு சுமார் 8 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பால்குடி மாறா குட்டி ஆடு ரூ.700 க்கு விற்பனை செய்யப்பட்டது. வளர்ந்த ஆடுகள் கிலோ ரூ.800 முதல் ரூ.1000 வரை விற்பனையானது. அதாவது பெரிய ஆடுகள் கிலோவிற்கு ஏற்ப ரூ.9000முதல் 28000 வரை விற்பனையானது.
ரம்ஜான் பண்டிகைக்காக ஆடுகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற இந்த சந்தையில் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Thoothukkudi,Tamil Nadu
March 29, 2025 8:38 PM IST
5 கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை… ரம்ஜான் பண்டிகைக்கு எட்டயபுரத்தில் களைகட்டிய ஆட்டுச்சந்தை…

