எடப்பாடி பழனிசாமியின் டெல்லி சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அமித் ஷா சந்திப்பு குறித்து கேட்கப்பட்டபோது, “புரட்சித் தலைவி அம்மாவும். எங்க பொதுச்செயலாளர் எடப்பாடியார்தான் இரும்பு மனிதர்கள். அவர் சந்திப்பைப் பற்றி ஊடகங்கள்ட்ட விவரமா சொல்லிட்டாரு. கூட்டணி பற்றி கேட்டா, ‘ஆறு மாதம் பொறுங்க, நாங்களே சொல்வோம்’னு சொல்லியிருக்காரு,” என்று பதிலளித்தார். “நாங்க துடிக்கல. சூட்கேஸ் கொடுக்கல. விருப்பப்பட்டு இருக்கற மாதிரி எல்லாம் இல்ல,” என்று கூறி, கூட்டணி பேச்சுவார்த்தைகளை மறுத்தார்.

