• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இந்தியாவில் புதிதாக கார் வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கும் தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
March 29, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் புதிதாக கார் வாங்கும் போது எவ்வளவு வரி செலுத்த வேண்டியிருக்கும் தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் ஒரு காருக்கு நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள்?: செபியில் பதிவுசெய்யப்பட்ட ஆராய்ச்சி ஆய்வாளரான ஏ. கே. மந்தன், சமூக ஊடக தளமான எக்ஸ் பக்கத்தில் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு தனிநபர், புதிதாக ஒரு கார் வாங்க எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார். அந்த வகையில், ஒரு நபர் புதிதாக கார் வாங்கும்போது, 28% ஜிஎஸ்டி, 20% வரை செஸ் மற்றும் 8-12% சாலை வரியை செலுத்த வேண்டியிருக்கிறது என்று அவர் விளக்கினார்.

உதாரணமாக, ரூ.11.65 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட மஹிந்திரா தார் கார் மாடலின் ஆன்-ரோடு விலை இறுதியாக ரூ.20.60 லட்சத்தை தொடுகிறது. இதில், வரிகள் மட்டும் ரூ.7.95 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது.

மேலும், ரூ.8 லட்சம் என அடிப்படை விலையில் கார் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினரும், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசு காரை வாங்குபவர்களும் ஒரே அளவிலான வரியையே செலுத்த வேண்டியிருக்கிறது என்பது மந்தன் சுட்டிக்காட்டினார். கூடுதலாக, அவர்கள் எந்த சிறப்பு சலுகைகளும் இல்லாமல், சுங்க வரி, எரிபொருள் மற்றும் காப்பீடு போன்ற செலவுகளையும் செலுத்த வேண்டியிருக்கிறது.

“இந்தியாவில் ஒரு காரை வாங்குவது மிகப்பெரிய மோசடி போன்றதாகும். ஏனெனில், மக்கள் முதலில், பணம் சம்பாதித்து அதற்கு வரி செலுத்துகிறார்கள். பின்னர், கார் வாங்கும்போது 28% ஜிஎஸ்டி மற்றும் 20% செஸ் வரியை செலுத்துகிறார்கள். பின்னர், 8-12% சாலை வரியை செலுத்த வேண்டும். ஜிஎஸ்டிக்கு முந்தைய, மகேந்திரா தார் காரின் விலை 11.65 லட்சம் மற்றும் இறுதியாக அதன் ஆன்-ரோடு விலை சுமார் 19.60 லட்சம்.

இவ்வாறாக, ரூ.11.65 லட்சம் மதிப்புள்ள காருக்கு ரூ.7.95 லட்சம் வரி செலுத்த வேண்டியிருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்க கார் உரிமையாளர், பிஎம்டபிள்யூ உள்ளிட்ட விலையுயர்ந்த கார் வாங்குபவர்களைப் போலவே எரிபொருளுக்கு பணம் செலுத்துகிறார். அதே போல், சுங்கம், பெட்ரோல் மற்றும் காப்பீட்டுத் தொகையையும் செலுத்துகிறார்” என்று மந்தன் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி கார் விலைகளை எவ்வாறு பாதிக்கிறது

கலால் வரி, வாட் மற்றும் சாலை வரி போன்ற பழைய வரிகளை ஜிஎஸ்டி மாற்றியுள்ளது, இது வரி அமைப்பை மேலும் நெறிப்படுத்தியுள்ளது. கார்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் பின்வரும் காரணிகளைப் பொறுத்தது:

* வாகனத்தின் வகை (சிறிய கார், செடான், எஸ்யூவி போன்றவை) * எரிபொருள் வகை (பெட்ரோல், டீசல், எலெக்ட்ரிக்) * எஞ்சின் திறன்

பெரும்பாலான தனிநபர் மற்றும் வணிக வாகனங்கள் 28% ஜிஎஸ்டி வகையின் கீழ் வருகின்றன, ஆடம்பர கார் மாடல்கள் கூடுதல் செஸ் வரியை செலுத்த வேண்டியிருக்கிறது. இதனால் அவற்றின் விலை இன்னும் உயர்கிறது.

கார்களுக்கான ஜிஎஸ்டி-ஐ கணக்கிடுதல்

புதிதாக ஒருவர் கார் வாங்கும் போது, ஒருவர் செலுத்த வேண்டிய மொத்த வரியை கணக்கிட பின்வரும் இந்த சூத்திரத்தைப் பயன்படுத்தலாம்.

மொத்த வரி = எக்ஸ்-ஷோரூம் விலை × (ஜிஎஸ்டி விகிதம் + செஸ் விகிதம்)

உதாரணமாக, மந்தன் மஹிந்திரா தாரின் விலை கணக்கீட்டை எடுத்துக்கொள்கிறார். அதன்படி, ரூ.11,65,000 எக்ஸ்-ஷோரூம் விலை கொண்ட மகேந்திரா தார் மாடலுக்கு செலுத்த வேண்டிய மொத்த வரி:

28% ஜிஎஸ்டி = ரூ.3,26,000

1% டிசிஎஸ் = ரூ.17,240

20% செஸ் = ரூ.2,33,000

சாலை வரி = ரூ.2,19,000

காப்பீடு = கிட்டத்தட்ட ரூ.1,00,000

இறுதி விலை = ரூ.20,60,240.

இவ்வாறாக, ரூ.11,65,000 மதிப்புள்ள காருக்கு ரூ.7.95 லட்சம் வரை வரி செலுத்த வேண்டியிருக்கிறது.

First Published :

March 29, 2025 2:30 PM IST

Read More

Previous Post

முதல் வார இறுதியில் 4,956 கோடி நிமிடங்கள்.. ஐபிஎல் பார்வையாளர்களில் ஜியோஹாட்ஸ்டோர் புதியதொரு உச்சம்

Next Post

இதனாலதான் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை பண்ணவில்லை – ஆர்.ஜே. பாலாஜி | Makkal Osai

Next Post
இதனாலதான் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை பண்ணவில்லை – ஆர்.ஜே. பாலாஜி | Makkal Osai

இதனாலதான் ஐ.பி.எல் கிரிக்கெட் வர்ணனை பண்ணவில்லை - ஆர்.ஜே. பாலாஜி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin