Last Updated:
ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோஹாட்ஸ்டாருக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனை பெறலாம்.
மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவாக கருதப்படும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) ஆகிய நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களில் புதிய பொழுதுபோக்கு சலுகைகளை அறிவித்துள்ளன.
இரண்டு நிறுவனங்களும் புதிய ஆட்-ஆன் பேக்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளன, இவை ஆக்டிவாக உள்ள பேக்ஸ்களுக்கு கூடுதலாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணைந்ததைத் தொடர்ந்து சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையான ஜியோஹாட்ஸ்டாருக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனை பெறலாம்.
இதனால் மேற்கண்ட டெலிகாம் வாடிக்கையாளர்கள் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகள், திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், அனிம் மற்றும் ஆவணப்படங்களை 4K ரெசல்யூஷனில் தங்கள் மொபைல் மற்றும் டிவியில் ஸ்ட்ரீம் செய்து கொள்ள முடியும்.
ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் கூடிய ஏர்டெல், விஐ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்:
ஏர்டெல் நிறுவனம் ஜியோஹாட்ஸ்டார்-க்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனுடன் கூடிய 2 புதிய கிரிக்கெட் பேக்ஸ்களை வெளியிட்டுள்ளது. இதில் ரூ. 100 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் 30 நாள் வேலிடிட்டி பீரியட் கொண்டுள்ளது. இந்த 30 நாட்களில் மொத்தம் 5GB டேட்டாவையும், 30 நாள் ஜியோஹாட்ஸ்டாருக்கான சப்ஸ்கிரிப்ஷனையும் வழங்குகிறது. மற்றொரு திட்டமான ரூ.195 பிளான், OTT ஸ்ட்ரீமிங் சேவைக்கான 90 நாள் சப்ஸ்கிரிப்ஷனுடன் 15GB டேட்டாவை வழங்குகிறது. இது 90 நாட்கள் வேலிடிட்டி பீரியட் கொண்டுள்ளது. எனினும் இவை இரண்டுமே ஆட்-ஆன் பேக்ஸ் என்பதால் டேட்டா வவுச்சர்கள் மற்றும் கால் ஆஃபர்ஸ் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஆக்டிவாக உள்ள அடிப்படை பேக்கை ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும்.
இதனிடையே வோடஃபோன் ஐடியா (Vi) நிறுவனம் இப்போது ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை உள்ளடக்கிய ஒரு டேட்டா வவுச்சர் மற்றும் இரண்டு தனித்தனி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்களை வழங்குகிறது. நீங்கள் ஒரு Vi யூஸராக இருந்தால், ஐபிஎல் 2025-ஐ கண்டு களிக்க மிகவும் சிறந்த வழி ரூ. 101 டேட்டா வவுச்சர் ஆகும். இது மூன்று மாத ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன், 30 நாள் வேலிடிட்டி பீரியட் மற்றும் 5GB டேட்டாவையும் வழங்குகிறது. இருப்பினும், இதற்கு ஆக்டிவாக உள்ள பேஸ் பிளான் தேவை.
இதை தவிர Vi வாடிக்கையாளர்கள் ரூ.239 மற்றும் ரூ.399 பேக்ஸ்களை ரீசார்ஜ் செய்வதை கருத்தில் கொள்ளலாம். இதில் ரூ.239 பிளான் அன்லிமிட்டட் கால்ஸ், 2GB டேட்டா, 300 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் ஜியோஹாட்ஸ்டார் போன்ற நன்மைகளை வழங்குகிறது. அதே சமயம் ரூ.399 பிளானானது அன்லிமிட்டட் கால்ஸ், ஒரு நாளைக்கு 2GB டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், 28 நாட்கள் ஜியோஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது.
March 29, 2025 10:21 AM IST


