கெவின் பீட்டர்சன் மற்றும் ஷிகர் தவானின் செல்வாக்கு
“கெவின் பீட்டர்சன், ஷிகர் தவான் போன்ற ஜாம்பவான்கள் ஆட்டத்தை எப்படி அணுக வேண்டும், அழுத்தமான சூழல்களை எப்படி கையாள வேண்டும் என வழிகாட்டுகிறார்கள். கடைசி எல்எஸ்ஜிக்கு எதிரான போட்டியில் கெவின் என்னிடம், ‘உன் ஆட்டத்தை ஆடு, உன்னை வெளிப்படுத்து, உன்னை நம்பு’ என்றார். அவர் என்மீது வைத்த நம்பிக்கையால், அந்த கொண்டாட்டத்தை அவருக்கு அர்ப்பணித்தேன்,” என்கிறார் அசுதோஷ்.

