Last Updated:
தெலங்கானாவில் 17 வயது இளைஞரை, தனது மகளை காதலித்ததற்காக சிறுமியின் தந்தை கோடாரியால் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் தனது மகளின் காதலனை தந்தை ஆணவக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம், முப்பிரிடோட்டா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலுக்கு சிறுமியின் தந்தை எதிர்ப்பு தெரிவித்த போதும் இருவரும் பழகி வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் தனது நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாட இருந்த நிலையில், சிறுமியின் தந்தை கோடாரியால் இளைஞரை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையும் படியுங்கள் : அரசு மறுவாழ்வு மையத்தில் துயரம்.. நான்கு குழந்தைகள் பரிதாப பலி
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தாக்குதலுக்கு முன்னதாக இளைஞர் சாலை விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். சாலை விபத்தில் இருந்து தப்பிய நிலையில், சிறுமியின் தந்தை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
March 28, 2025 9:36 PM IST


