Last Updated:
Goat Sales| செஞ்சி வார சந்தையில் ரம்ஜான் முன்னிட்டு ஆடு விற்பனை படு ஜோரு.
விழுப்புரம் அருகே செஞ்சி வார சந்தையில் ரம்ஜானை முன்னிட்டு, ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு விற்பனை சற்று மந்தம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வெள்ளிக்கிழமைதோறும் நடைபெறும் வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகள் மேய்ச்சலுக்காக மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை தாவரங்களை மேய்ந்து வளர்க்கப்படுவதால் இங்கு வளரும் ஆடுகளுக்கு அதிக மவுசு உள்ளது.
இங்கு வளர்க்கப்படும் வெள்ளாடுகளை வாங்குவதற்கு தேனி, கம்பம்,மதுரை, கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், விராலிமலை, வேலூர்,ஆம்பூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கிச் செல்வார்கள் என்பதால் செஞ்சி வாரச்சந்தை மிகவும் பிரசித்தி பெற்ற சந்தையாக உள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை வார ஆட்டு சந்தையான இன்று அதிகாலை 3 மணி முதலே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் செஞ்சி வார சந்தைக்கு வந்திருந்தனர். மேலும் விற்பனைக்காக சுமார் 7 ஆயிரம் ஆடுகள் வரை விவசாயிகளும், ஆடு வளர்ப்பவர்களும் கொண்டு வந்திருந்தனர். குறிப்பாக மார்ச் 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாட இருப்பதால் ஆடுகள் விற்பனை அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டை விட மந்தமாக நடைபெற்றதாகும். கடந்த ஆண்டு 8 கோடிக்கு விற்பனையான ஆடு இன்று 3 கோடி முதல் 4 கோடி வரை மட்டுமே ஆடு விற்பனை ஆகி இருக்குமென ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில் வெள்ளாடுகள் ஜோடி 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரையிலும், குறும்பாடுகள் ஜோடி 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 4 கோடிகள் வரை ஆடு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
March 28, 2025 5:35 PM IST

