Last Updated:
தோனி கடைசி 2-3 ஓவர்களில் மட்டும் களமிறங்கி, அணிக்கு தன்னால் முயன்ற பவுண்டரிகளை விளாச முயற்சி செய்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் 12 சிக்சர்கள் அடித்தால், டி20 கிரிக்கெட்டில் 350 சிக்சர்களுக்கு மேல் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் தோனி 3ஆவது இடத்தை பிடிப்பார்.
இந்த பட்டியலில் ரோகித் சர்மா 525 சிக்சர்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 416 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 343 சிக்சர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
ஒருவேளை தோனிக்கு முன்னர் சூர்யகுமார் யாதவ் 7 சிக்சர்களை விளாசினால், இந்த பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்தையும், தோனி 4ஆவது இடத்தையும் பிடிப்பார்கள்.
தோனி கடைசி 2-3 ஓவர்களில் மட்டும் களமிறங்கி, அணிக்கு தன்னால் முயன்ற பவுண்டரிகளை விளாச முயற்சி செய்கிறார். அந்த வியூகம் இந்த ஐபிஎல் தொடரிலும் தொடர்ந்தால், 350 சிக்சர்களை விளாசிய இந்தியர்களின் பட்டியலில் தோனி மூன்றாவது இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
தோனி இதுவரை 265 ஐபிஎல் போட்டிகளில், 5243 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 137.46 ஸ்ட்ரைக் ரேட்டில் 39.12 ரன்கள் சராசரியாக வைத்துள்ளார். மேலும் 98 சர்வதேச டி20 போட்டிகள் விளையாடி, 1617 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையும் படிக்க: வாஷிங்டன் சுந்தருக்கு ஆதரவு தெரிவித்த சுந்தர் பிச்சை.. எக்ஸ் தளத்தில் லைக்ஸை குவித்த பதிவு
இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. பெங்களூரு அணிக்கு எதிராக தோனி 140.1 ஸ்ட்ரைக் ரேட்டுடன், 849 ரன்களை விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.
March 28, 2025 2:42 PM IST


