• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

South Korea Fire: தென் கொரியாவில் கட்டுக்கடங்காத காட்டு தீ.. 27 பேர் பலியான சோகம்!

GenevaTimes by GenevaTimes
March 28, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
South Korea Fire: தென் கொரியாவில் கட்டுக்கடங்காத காட்டு தீ.. 27 பேர் பலியான சோகம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 28, 2025 7:36 AM IST

South Korea Fire: இதுவரை 88,960 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்து போயுள்ளன.

News18News18
News18

தென் கொரியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஆக அதிகரித்துள்ளது.

தென் கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள சான்சியாங்க் பிராந்தியத்தின் காடுகளில் கடந்த வாரம் தீ பற்றியது. அங்கு நிலவும் வறண்ட வானிலை காரணமாகவும் காற்றின் வேகத்தாலும் தீ மளமளவென பரவி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதுவரை 88,960 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. 300க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்து போயுள்ளன.

இந்த தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர். இதில் தீயை கட்டுப்படுத்த சென்ற 4 தீயணைப்பு வீரர்களும் அடங்குவர். காட்டு தீ பற்றி எரிந்து வரும் பகுதிகளில் வசித்த 37,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளளனர். கடற்கரை கிரமமான, சியோக்-ரியில் இருந்த பெரும்பாலான குடியிருப்புகள் எரிந்து சாம்பலாகின. அதேபோல், உய்சோங்கில், கவுன்சா கோயில் வளாகத்தில் 20 கட்டமைப்புகள் முற்றிலும் எரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: பூமிக்கடியில் ஏவுகணை நகரம்… அமெரிக்கா மிரட்டலுக்கு வீடியோ வெளியீட்டு பீதியை கிளப்பிய ஈரான்

கவுன்சா கோயில் 7-வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது மட்டுமல்லாமல், 1668ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பெவிலியன் வடிவ கட்டடம், தென் கொரிய மன்னரின் நீண்ட ஆயுளைக் குறிக்கும் வகையில் 1904 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஜோசோன் வம்ச அமைப்பு ஆகியவையும் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. காட்டுத் தீயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மற்றொரு கிரமமான ஆண்டோங்-கில் மிகவும் பழமை வாய்ந்த கோயிலான போங்ஜியோங்சாவை பாதுகாக்க அதிகாரிகள் போராடி வருகினறனர்.

அங்குள்ள மரங்களை வெட்டியும், கோயில் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாதுகாப்பு அரணை உருவாக்கியுள்ளனர். கோயிலை பாதுகாக்க 200 ஆண்டுகளான மரங்கள் வெட்டப்படுவதாக அதிகாரிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். கட்டுக்கடங்காமல் பரவி வரும் தீயை கட்டுப்படுத்த 120 ஹெலிகாப்டர்களும் 9000 வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தென் கொரிய வரலாற்றில், இதுவே மிகவும் மோசமான காட்டுத் தீயாக கருதப்படுகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First Published :

March 28, 2025 7:36 AM IST

Read More

Previous Post

ஏப்.1 முதல் வங்கிகளில் 6 புதிய ரூல்ஸ் அறிமுகம்.. என்ன தெரியுமா?

Next Post

சாக்லேட் வடிவில் புதிய போதைப் பொருள் விற்பனை…. மாணவர்கள் உஷார் | Makkal Osai

Next Post
சாக்லேட் வடிவில் புதிய போதைப் பொருள் விற்பனை…. மாணவர்கள் உஷார் | Makkal Osai

சாக்லேட் வடிவில் புதிய போதைப் பொருள் விற்பனை.... மாணவர்கள் உஷார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin