Last Updated:
நெட்டிசன்கள், “ரியான் பராக்கிற்கு இவ்வளவு பெரிய ரசிகரா” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர்.
ஐபிஎல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 22 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 151 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது ராஜஸ்தான் அணியின் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் தனது நான்காவது ஓவரை வீசினார். அப்போது மைதானத்தில் பாதுகாப்பு வளையத்தை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த இளம் ரசிகர் ஒருவர், ரியான் பராகின் காலில் விழுந்தார். பின்னர் அவரை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார்.
இதற்குள்ளாக அங்கிருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த இளைஞரை வெளியே அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரியான் பராகை கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் பதிவு குவிந்துள்ளன.
நெட்டிசன்கள், “ரியான் பராக்கிற்கு இவ்வளவு பெரிய ரசிகரா” என்று ஆச்சரியத்துடன் கூறியுள்ளனர். இன்னும் சிலர், “சம்பளத்திற்காக பணம் கொடுத்து இளைஞரை அழைத்து வந்திருக்கலாம்” என்றும் “அவருக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டிருக்கலாம்” என்றும் கிண்டலாக கூறியுள்ளனர்.
So, Riyan Parag hired a boy and paid him 10,000 Rs to come onto the ground and touch his feet.
What an attention seeker this guy is!#RRvsKKR pic.twitter.com/0w7gfW7lAC
— Dr Nimo Yadav 2.0 (@niiravmodi) March 26, 2025
இன்னும் சிலர் “தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக விராட் கோலி போன்று தன்னை பிரபலமாக காட்டிக்கொள்ள ரியான் பராக் இந்த வேலையை செய்திருக்கலாம்” என்றும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ரியான் பராக்கின் பெயர் நேற்றிலிருந்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
March 27, 2025 8:48 PM IST


