நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் பணி ஒன்றும் அவ்வளவு எளிதல்ல மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளில் இருந்து காப்பதும் அவர்களுக்கு தேவையான நேரங்களில் பாதுகாப்பு அளிப்பதும் வன்முறைகள் எழாமல் கட்டுப்படுத்துவதும் தலையாயக் கடமையாகக் கொண்டு இரவு பகல் பாராது பணியாற்றும் பணி நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கிய வாய்ந்ததாகும்.
நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்கள் மாநிலங்களுக்கு ஏற்றார் போல் தங்களின் அரசு முத்திரை, காக்கி உடையில் வலம் வரும் காவலர்களின் முதல் நிலைக் காவலர், இரண்டாம் நிலை காவலர், தலைமை காவலர் என தொடங்கி மாநில காவல் துணை இயக்குனர் வரையில் பல்வேறு பிரிவுகளில் 20க்கும் மேற்பட்ட காவலர் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பலரை பொதுவான காக்கி உடையில் அடையாளம் காண்பது சிரமமாக அமைந்தாலும் அவர்களின் தலையில் உள்ள தொப்பியை கொண்டு சரியாக அடையாளம் காண்பது எளிது.
காவலர்களின் தலையில் உள்ள தொப்பி சமூகத்தில் மக்கள் இடையே நன்மதிப்பை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் மக்கள் இடையே பெருமதிப்பு கூட்டும் காவலர்கள் பயன்படுத்தும் தொப்பியை மக்கள் அதிகம் கூடும் பொதுக் கூட்டங்கள், கோவில் திருவிழாக்கள் போன்றவற்றில் குற்றச்சம்பவங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோர் பணியமர்த்தப்படுவது வழக்கம்.
இம்மாதிரியான இடங்களில் காவலர்களுக்கு தேவையான தொப்பிகளை உடனடியாக தயாரித்து வழங்கி வரும் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்த
இவர் அதிகம் போலீசார் பந்தோபஸ்தில் ஈடுபடும் இடங்களில் சென்று அவர்களுக்கு தேவையான தொப்பிகளை கைகளாலேயே தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
இவற்றில் முதல் நிலை காவலர்கள், பெண் காவலர்கள் என தலைமை காவலர் வரையிலான அனைவருக்கும் தொப்பிகளை உடனடியாக தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 26 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கோவில் திருவிழாக்களிலும், கட்சி பொதுக் கூட்டங்களிலும் அதிக அளவில் இம்மாதிரியான தொப்பிகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்.
தொப்பி விற்பனையாளர் கூறுகையில் நான் கடந்த 25 பொதுக் கூட்டங்கள், கோவில் நிகழ்ச்சிகளில், அதிக அளவில் போலீஸ் பந்தோபஸ் கொடுக்கும் இடங்களில் இம்மாதிரி கேப்புகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் மற்ற நேரங்களில் ஒவ்வொரு காவல் நிலையமாக சென்று அவர்களுக்கு தேவையான தொப்பிகளை விற்பனை செய்கிறோம் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர், எஸ்ஐ போன்றவர்களின் தொப்பிகள் விற்பனை செய்வதில் எங்களுக்கு 50 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இதையும் வாசிக்க: என்னது தோசை சுட மிஷின்னா ? இனி தோசை ஈஸியா சுடலாம்!
ஆனால் பெண் காவலர்கள், பெரைட் காவலர்களின் தொப்பிகள் விற்பனை செய்தால் 5 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும் என்றும் கடந்த 25 ஆண்டுகளாக இந்த வேலையை செய்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
தலைமை காவலர்கள் பயன்படுத்தும் நீல நிற தொப்பிகள் 250 ரூபாய்க்கும், காவல் ஆய்வாளர்கள் பயன்படுத்தும் காக்கி நிற தொப்பிகள் 350 ரூபாய்க்கும், இதர காவலர்கள் பயன்படுத்தும் தொப்பிகள் 100 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)