இந்தியா போன்ற பெரிய நாட்டில் செயற்கை நுண்ணறிவை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் குறித்து பில்கேட்ஸூடன் நடத்திய கலந்துரையாடலில் பிரதமர் பகிர்ந்துகொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே சமீபத்தில் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த விவாதத்தில் இருவரும் பல விஷயங்கள் குறித்து பேசினர். சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற முக்கிய தலைப்புகளில் இருவரும் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்துகொண்டனர்.
அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து இருவரும் பேசும்போது, இந்தியா போன்ற பெரிய நாட்டில் இருக்கும் சவால்கள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். செயற்கை நுண்ணறிவு போன்ற சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் முறையான பயிற்சி இல்லையென்றால், அது ஆபத்துகளை விளைவிக்கக்கூடும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாட்டை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசினார். AI மூலம் உண்டாக்கப்படும் பதிவுகளில் வாட்டர் மார்க் கொண்டுவரவேண்டும். அது தவறான தகவல்கள் பரப்புவதைத் தவிர்க்க உதவும் என கூறினார்.
அதேபோல், என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி வழிமுறைகள் வழங்கப்படவேண்டும் எனவும் கூறினார். இதனிடையே, டீப்ஃபேக் குறித்து தன்னுடைய வருத்தைத் தெரிவித்த பிரதமர், ”என்னுடைய குரலைக் கொண்டு பல்வேறு டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டத்தில் மக்கள் இதனை நம்ப வழிவகுக்கிறது. இதனால் தவறான தகவல்களை பரவத்தொடங்கி விடுகிறது என கூறினார்.
பிரதமர் மோடி, அவர் குறித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் டீப்ஃபேக் வீடியோகள் குறித்து பொது வெளியில் அவ்வபோது பேசி வருகிறார். ஊடகங்கள் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
