Last Updated:
நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் காணப்பட்ட சூழலில், கடைசி ஓவர்களை பஞ்சாப் அணியின் பவுலர்கள் மிகத் திறமையாக வீசி அணியை வெற்றி பெற வைத்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், குஜராத் அணியின் கேப்டன் பொறுப்புக்கு சுப்மன் கில் இன்னும் தயாராகவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் விமர்சகருமான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 243 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 244 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 232 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இந்தப் போட்டி குறித்து விமர்சகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வீரேந்திர சேவாக் கூறியதாவது, “இந்த ஆட்டத்தில் சுப்மன் கில்லுடைய கேப்டன்ஷிப் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவர் கேப்டனாகப் பணியாற்றுவதற்குத் தயாராகவில்லை என்றுதான் கருதுகிறேன்.
சிராஜ் நன்றாகப் பந்து வீசிக்கொண்டிருக்கும்போது அவருக்குப் பதிலாக அர்ஷத் கானை கில் உள்ளே கொண்டு வந்தார். அவர் சுமார் 21 ரன்கள் வரை ஒரே ஓவரில் விட்டுக் கொடுத்தார். அந்த ஓவர்தான் பஞ்சாப் அணியின் ரன் குவிப்புக்கு அடிப்படையாக அமைந்தது. அந்த ஓவரில் கிடைத்த எழுச்சியை பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் கடைசிவரை தக்க வைத்துக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.
நேற்றைய ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் காணப்பட்ட சூழலில், கடைசி ஓவர்களை பஞ்சாப் அணியின் பவுலர்கள் மிகத் திறமையாக வீசி அணியை வெற்றி பெற வைத்தனர்.
March 26, 2025 6:20 PM IST


