சீன ஆராய்ச்சியாளர்கள் புதிய “Hypersonic Afterburner’ என்ற போர் விமான கருவியைச் சோதித்துள்ளனர். இது விமானத்தின் உந்துதலை இரண்டு மடங்காக்கி, ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு வேகத்தில் (Mach 6) செலுத்த உதவும்.
பெய்ஜிங்கில் உள்ள பிகாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த இரண்டாம் நிலை எரிதல் இயந்திர நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், அடிப்படை எரிபொருள்களை உபயோகித்து எஞ்சின் மேலே பறந்தபிறகு, இந்த afterburner கூடுதல் உந்துதலை வழங்கும்.
இந்த இயந்திர நுட்பத்தின் மூலம் ஸ்க்ராம்ஜெட்டின் உந்துவிசையை இரண்டு மடங்காக அதிகரிக்க முடியும் என்கின்றனர்.
வழக்கமாக ஜெட் விமானம் செல்லும்போது எஞ்சினில் இருந்து வெளியேறும் வாயுக்களில் மெக்னீசியம் பொடியைச் செலுத்துவதன் மூலம் இந்த உந்துவிசையைப் பெறுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தளம் தெரிவிக்கிறது.
இதனை உறுதி செய்வதற்கான சோதனை தரையிலிருந்து 30 கி.மீ உயரத்தில் நடத்தப்பட்டிருக்கிறது.

