சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கமாக காணப்பட்ட நிலையில், குறிப்பாக பிப்ரவரி 11 ஆம் தேதி வரலாறு காணாத வகையில், புதிய உச்சத்தை தொட்டு ரூ.64,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன்பிறகு விலை குறைவதும், உயர்வதுமாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

