• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாஜக வரி பயங்கரவாதம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு நோட்டீஸ் விவாதம்

GenevaTimes by GenevaTimes
March 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாஜக வரி பயங்கரவாதம் – காங்கிரஸ் குற்றச்சாட்டு நோட்டீஸ் விவாதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நான்கு ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்கை மறுதணிக்கை செய்ய தடை விதிக்கக் கோரி தில்லி உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடியான நிலையில், வருமான வரித்துறை இந்த புதிய நோட்டீஸை அனுப்பியிருக்கிறது.

இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அஜய் மக்கான் உள்ளிட்டோர் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, பாஜக தற்போது வரி பயங்கரவாத தாக்குதலில் ஈடுபடுகிறது, பொருளாதார ரீதியாக காங்கிரஸ் கட்சியை முடக்கி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறுவதே பாஜகவின் நோக்கம் என்று குற்றம்சாட்டியுள்ளனர்.

பாஜக, தொடர்ச்சியான வருமான வரித்துறை விதி மீறலை மேற்கொண்டு வருகிறது. வருமான வரித்துறை, பாஜகவிடமிருந்து ரூ.4,600 கோடிக்கு மேல் அபராதத்தை திரட்ட வேண்டியது இருக்கும் என்று அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் கடந்த 2014 – 2021ஆம் நிதியாண்டில் கணக்கில் வராத தொகை ரூ.523.87 கோடி பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வருமான வரித்துறை நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, அண்மையில், காங்கிரஸ் வங்கிக் கணக்கிலிருந்து வருமான வரித்துறை அபராதமாக ரூ.135 கோடியை நிலுவைப் பிடித்தங்களை செய்தபோதுதான் கட்சி நிர்வாகத்துக்குத் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின்போது ரூ.523.87 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணப்பரிமாற்றம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் முன்பு, காங்கிரஸ் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வங்கிக் கணக்கிலிருந்து ரூ.135 கோடி பிடித்தம் செய்யும் நடைமுறையை நிறுத்திவைக்கக் கோரி முறையிடப்பட்டது. ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேவேளையில், தில்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

கொட்டித் தீர்க்கும் மழை… இன்றைய வானிலை குறித்து வெளியான தகவல்

Next Post

MS Dhoni: ‘தோனி களமிறங்கி விளையாடல.. ஆனால்’-ஷிவம் துபே அரை சதம் விளாசிய பிறகு தோனி ரியாக்ஷனை பாருங்க!

Next Post
MS Dhoni: ‘தோனி களமிறங்கி விளையாடல.. ஆனால்’-ஷிவம் துபே அரை சதம் விளாசிய பிறகு தோனி ரியாக்ஷனை பாருங்க!

MS Dhoni: ‘தோனி களமிறங்கி விளையாடல.. ஆனால்’-ஷிவம் துபே அரை சதம் விளாசிய பிறகு தோனி ரியாக்ஷனை பாருங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin