March 25, 202512:11 PM IST
Tamil Live Breaking News : திறன்மிகு மையங்கள் ஓசூர், சூலூரிலும் அமைக்கப்படுமா? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்
தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு மின்னாளுமை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் திறன்மிகு மையத்தை சென்னையில் மட்டுமல்லாமல் ஓசூர் , சூலூரிலும் அமைக்க வேண்டும் என்று கே.பி.முனுசாமி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், காலம் மாற மாற சில சூழல்கள் மாறிவிடும். நிதி பெறுவதில் உள்ள சிரமங்கள் குறித்து இப்போது புரிந்து கொள்கிறீர்களா என அவை முன்னவர் துரைமுருகன் சமீபத்தில் என்னிடம் கேட்டார். நான் நிதி அமைச்சராக இருந்தபோது 200 கோடி ஐடி துறைக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது 130 கோடிதான் ஐடி துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசின் நிதி நிலைமை தட்டுப்பாட்டில் உள்ளது. ஐடி துறையும் நிதி தட்டுப்பாட்டில் உள்ளது. ஐடி துறைக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட 300 கோடிக்கு மேற்பட்ட நிதியை ஐடித்துறையிடம் இருந்து தமிழ்நாடு அரசு திரும்ப பெற்றுக்கொண்டது. மானிய நிதி ஐ.டி துறைக்கு வந்து சேரவில்லை. தடைகள் , தட்டுப்பாட்டோடுதான் ஐடி துறை நிதியை செலவிட முடிகின்றது. ஐடி துறைக்கான நிதிநிலை சீராகும்போது உறுப்பினர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும், என்றார்

