Last Updated:
தனக்கும் பணத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாக நீதிபதி யஷ்வந்த் வர்மா கூறியுள்ளார்.
புகாருக்குள்ளான டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, அலகாபாத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த 14-ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்ட போது, கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பணம் இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, நீதிபதி வீட்டில் தீப்பற்றி எரியும் ரூபாய் நோட்டுகளை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் வீடியோவை உச்ச நீதிமன்றமே வெளியிட்டது. இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவை, அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்து, உச்சநீதிமன்றம் கொலிஜியம் நேற்று உத்தரவிட்டது. இதை ஏற்க முடியாது என கூறியுள்ள அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், இன்று முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Also Read: ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த காமெடியன்.. குணால் கம்ராவை டார்கெட் செய்த சிவசேனாவினர்
இதனிடையே, தனக்கும் பணத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மா, தனக்கு எதிராக மிகப்பெரிய சதி நடப்பதாகவும் கூறியுள்ளார்.
March 25, 2025 8:22 AM IST
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கு.. அலகாபாத் வழக்கறிஞர் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டம்.. என்ன காரணம்?


